மே தினமே மேதினியில் (712)
அறிவின் விருட்சம்
அவரா இவரா எவர்தான் கடவுள்
கவி 716
அவரா இவரா எவர் கடவுள்
இருக்கிறாரா இல்லையா
இருந்தால் ஒருவரா பலரா
கடவுளை படைத்தவர் யார்
அண்டத்தை ஆட்சிசெய்யும் அபூர்வ சக்தி
அகிலத்தை ஆட்டிப் படைப்பவர்
அகக்கண்ணாலேயே உணரலாம் மறைந்தே இருக்கின்றார்
ஆதியும் அந்தமும் அவராக
நாதியற்றவருக்கு அவரே துணையாக
நல்லது நடந்தால் அவரது கருணை
கெட்டது நிகழ்ந்தால் அது தலைவிதி
இல்லாமலும் இருக்கின்றார்
இருந்தும் இல்லாமலிருக்கின்றார்
அனைத்தும் அவர் செயலே
அவரின்றி ஓரணுவும் அசையாது
சுணாமியால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலியானார்
கொரோனாவால் ஆயிரக்கணக்கில் மக்கள் மடிந்தார்கள்
கடவுள் நல்லவரா தீயவரா
கடவுள் நல்லவர் சாத்தான்தான் கெட்டது
தெய்வம், திருக்கூத்துக்கள் செய்யும்
கொடுக்கும்போது கூரையை பிய்த்துக்கொண்டே கொடுப்பார்
எடுக்கும்போது சொல்லாமல்கொள்ளாமல் எடுப்பார்
தன் இரும்புக் கரத்தால் அடிப்பார்
விரும்பும்போதே தருவார்
நாம் ஒன்று நினைக்க அவரொன்று நினைப்பார்
மர்மமான வழிகளிலேயே செயற்படுவார்
அவர் காட்டுவார் ஊட்டிவிடமாட்டார்
நிலையில்லா தன்மைக்கும் நிலையான தன்மைக்கும் நடுவில் வாழ்க்கையை ஊசலாடவிட்டவரே அவர்தான்
மதம் பிடித்தவர்க்கு மதம்தான் கடவுள்
மனம் கொண்டோர்க்கு மனிதம் தான் கடவுள்
அள்ளிக்கொடுக்கும் இயற்கை உயிர்காக்கும் கடவுள்
பாசம் பொழியும் பெற்றோர் உருவமுள்ள கடவுள்
உள்ளம் மட்டும் கோவிலானால் நீ கடவுள் நான் கடவுள் நாம் கடவுள்
உங்கள் பக்கத்திலேயே கடவுள் இருக்க
கடவுளை எங்கே தேடுகிறாய்?
ஜெயம்
21-03-2024
