புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

இரா.விஜயகௌரி

புலம்பெயர் தமிழர்களே……….

புலம்பெயர் தமிழர்களே
புரியாமல் ஒரு கேள்வி
வாழ்வின் வேள்வியில் நாம்
நிலைகுலைந்த நொடியேது

இதய அழுத்தத்தால் இடர்பாடு
இன்னல்களுள் நெருடி எழும்சிறுநொடிகள்
காலச்சக்கரத்தை. பாதத்துள்
கடிகார முள்ளுக்குள் அழுத்தி வைத்தோம்

சொத்தும் சுகமும் கரைபுரள
சொல்லாமல் நாம் கரையும் இறுதி நொடி
தமிழருக்கே அதிகமென்றால் ஏன்
உணவா உழைப்பா அதிர்வலைகள் எங்கே

சிதறிப்போய் விடுவோமா சிந்திக்கத்தவறின்
பெரும் மூட்டை சுமந்து பேரவதி கொண்டு
அழுத்தும் சுமையால் அடங்குகின்றோம்
துடிக்கும இதயத்தை அறிவீரோ

ஆம் நிஜமிது நமக்கே அதகமாம்
புலம்பெயர் அகதித்தமிழர்களே
அலைந்து குலைந்தது போதும்
வாழ்வின் பொருளுணர்ந்து வடிவமைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading