22
Jan
இரா.விஜயகௌரி
முதுமை என்றோர் பருவ நிலை
மூப்பை நிறைத்திடும் உருவ நிலை
காலம் விதைத்தெழும் கால நிலை
கண்களுள்...
22
Jan
” உழவும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A) " உழவும் தமிழும் " 22.01.2026
தமிழர்களின்...
22
Jan
தன்னம்பிக்கை 82
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-01-2026
சுற்றியிருக்கும் இருள்
சூறையாட நினைத்தால்
துணிவெனும் தீச்சுவாலை
கொழுந்து விட்டெரியட்டும்!
விழுந்தால் எழுவாய்
விதிதனை வெல்வாய்
விடியும்...
ஔவை
காத்திருக்கும் காதலி…..
=======================
மூடுபனிக் காலமிது
முன்னிரவு நேரமிது
தேடுகிறேன் உன்னைத்
தெரியவில்லைக் கண்களுக்கு
வீடுசேர வழியுமில்லை
விடியலும் எனக்கில்லை
வாடுகின்றேன் ஏங்கியே
வந்துவிடு விரைவாக
காதலெனும் நோயால்
கனவுகளில் மிதக்கின்றேன்
மோதலின்றி இணைகிறேன்
மோகத்தில் மூழ்கிறேன்
வேதனை தாழவில்லை
வேறொரு வழியுமில்லை
சாதலைத் தவிர்த்துவிடச்
சடுதியாய் வந்துவிடு
காலங் கனியுமுன்
கைபிடிப்பேன் என்றாயே
காலங்கள் நீண்டு
காத்திருக்க வைத்தாயே
காலனவன் வருமுன்
கண்முன் வருவாயோ
காலச் சுழற்சியில்
காணாமல் போவாயோ
காதலில் காலங்கள்
கடந்தோடி விட்டது
காதல் மட்டுமின்று
கனவுடன் வாழுது
காதலைத் தந்துவிட்டு
காணாமல் போனாயே
காதலுடன் வந்து
கரையேற்றி வைப்பாயோ …
ஒளவை.
Author: Nada Mohan
20
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-01-2026
அறிவின் கூர்மையைச் சோதித்து
அறியாமை இருளைப் போக்கி
குழப்பம் செய்வது எனது...
17
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
புதிருக்குள் புதிர் போட்டாலே
அதிர்வுக்குள் பதில் கிடைத்திடும்
எங்கப்பன் குதிருக்குள் இல்லை
கேட்டதும் போட்டானே ஒரு...
14
Jan
-
By
- 0 comments
கேள்வியாகப் பிறந்து
பதிலாக உறங்கும்
கேலியான வினாவாகி
மூளையை அரிக்கும்
சொல்லால் சுழன்று
சிந்தையை சோதிக்கும்...