தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

கமலா ஜெயபாலன்

தலையீடு
இலவசமாக கிடைக்கும் இடைஞ்சல் தந்திடும்
இதனால் பலரின் இதயம் நொருங்கிடும்
குடும்பச் சண்டை கொஞ்ச நேரம்
குறுக்கிடும் கூனியால் குழம்பும் குவலயம்

நன்மை என்று நாமும் நினைத்து
நாடி ஓட நாணயம் பேசி
தன்னை மறந்து தலைவர் ஆகியும்
தலையைக் நுழைத்து தன்மானம் இழக்காது

அவனவன் வேலையை அவனவன் பார்ப்பான்
அடுத்தவன் ஏனோ அவசர நுழைவு
தவமான வாழ்வில் தன்னிறைவு வேண்டும்
தலையீடும் இல்லையேல் தரமாகும் வாழ்வு

உன்னைப் போலவே உலகினை நேசி
உண்மை விளங்கும் உள்ளிடும் போதே
அன்பில் அகிலம் அரண்டு போக
ஆறுதலாய் இருப்போம் அடுத்த தலைமுறைக்கு!

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan