கமலா ஜெயபாலன்

தண்ணீர்க் குடத்தழகி
——————————-
தண்ணீர்க் குடத்தழகி
தாமரைப்பூ முகத்தழகி
மண்ணின் மணத்தழகி
மயக்கிடும் கண்ணழகி/

கொடியிடை அசைந்தாட
கொலுசு குதித்தாட
வடிவான வஞ்சியவள்
வாறாளே வாஞ்சையுடன்/

தண்ணீர் சரிந்தொழுக
தாவணியும் நனைந்தூற
கண்மை கரைந்தோட
காரிகையே பேரழகே/

சிலைபோல உன்னழகு
சீண்டுதடி என்மனதை
கலையாத உன்னுருவம்
கண்ணிற்குள் நிற்குதடி/

வண்ணக் கிளியழகே
வசந்த மலரழகே
எண்ணங்கள் தோன்றுதடி
என்னவளே என்மனசில்/

நெற்றி வகிடெடுத்து
நீவித் தலைமுடித்து
பற்றுடன் பாரேன்டி
பாவிமகன் நனேன்டி/

பஞ்சுவிரல் கையழகி
பவள உதட்டழகி
மஞ்சள் நிறத்தழகி
மச்சானைப் பரேண்டி/

இஞ்சி இடுப்பழகி
இதமான கண்ணழகி
பஞ்சியும் பராமல்
பாய்ந்தோடி வாயேண்டி

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading