தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

கவி இல(125) 21/03/24 எப்படி வலித்திருக்கும்

குறையுள்ள மனிதரே
குறையில்லா மனிதரை
குற்றவாளியென்று
தீர்ப்பு சொன்னால்
எப்படி வலித்திருக்கும்

ஏளனமும் துன்பமும்
எள்ளி நகையாடலும்
மறுதலிப்பும் வேதனையும்
மரண வாதையாய்
எப்படி வலித்திருக்கும்

உண்மையே பேசி
நன்மையே செய்தவரை
கத்தியும் ஈட்டியுமாய்
கடும் கசை நீட்டிட
எப்படி வலித்திருக்கும்

சிலுவைச் சுமையுடன்
கரடு மரடு பாதையிலே
முள் மேல் நடந்து
கல்வாரி சென்ற இயேசுவுக்கு
எப்படி வலித்திருக்கும்

கையிலும் காலிலும்
இரும்பாணி துளையிட
தலையிலே கூரிய முள்முடி ஏறிட
தாகமென்று மொழிந்து
தன்னுயிர் ஈந்தாரே ஐயோ ,,,
என் இயேசுவுக்கு
எப்படி வலித்திருக்கும்.

Nada Mohan
Author: Nada Mohan