உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கீத்தா பரமானந்தன்

கீத்தா பரமானந்தன்

காதல்! குடும்பம் என்னும் கோவிலைலே குலவி நிற்கும் மாருதமாய் இடும்பை போக்கு மின்னிசையாய் இணைத்து நின்றே யிதயங்களை துடுப்பா யியக்கி நித்தமுமே துணிவைப் பகரு மிணைப்பிதுவே தொடுத்த சரமாய்த் தோளினையே தொட்டே யணைக்கும் காதலென! மழலை மொழியின் இனிமையிலே மயக்கும் கானக் குயிலினிலே வளமா மியற்கை வசந்தத்திலே வருடல் செய்யும் வனப்பிதுவே! முழவா யிசைத்தே இதயங்களில் முழுதாய்ப் பொழியும் மோகனத்தில் அழகே யெங்கும் தாலாட்டாய் அணைத்தே வருடும் பூமியையே! உருவ மில்லா உவப்பாகி உதயம் கண்ட வனைத்திலுமே பருவ மற்றே பதியமிட்டு பதித்த முத்தாய் இதுவன்றோ அருகா வுணர்வா யண்டமெங்கும் அழகாய்ப் படரும் தொடர்கதையாய்த் தருதே களிப்பை யாயுளுக்கும் தரணி யெங்கும் காதலதே! கீத்தா பரமானந்தன்14-02-2021

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to