வரமானதோ வயோதிபம் 53
” வரமானதோ வயோதிபம் “
கீர்த்தனா (இலங்கை)
*சுதந்திரமாமே!?*
_எது சுதந்திரம்!?_
பறக்கும் பறவைகளை கூட்டில் அடைத்து மகிழ்வது சுதந்திரமா?
படிக்கும் பெண்ணை வீட்டில் அடைத்து காப்பது சுதந்திரமா?
ஆடை சுதந்திரம் என்ற பெயரில் அரை குறை ஆடை சுதந்திரமா?
அடிப்படை உரிமை மறுக்கும் நாட்டில் அது பெற்ற சுதந்திரம் சுதந்திரமா??
தலைமை என்ற பெயரில் அடக்குமுறை செய்வது சுதந்திரமா?? உரிமை என்ற பெயரில் ஊழல்கள் புரிவது சுதந்திரமா?
மனம் போன போக்கில் மதி கெட்டு வாழ்வது சுதந்திரமா?
மதுவுக்கு மயங்கி மாயங்கள் புரிவது சுதந்திரமா?
கல்வியை காசுக்கு விற்பது சுதந்திரமா?
காலத்தை கண்டபடி கடத்துவது சுதந்திரமா?
தாரத்தின் தாலி பிடுங்கி குடும்பத்தை அழிப்பது சுதந்திரமா?
தாய் தந்தையை பாரமாய் எண்ணி கைவிட்டிருப்பது சுதந்திரமா?
ஆண் என்றால் அதிகாரம் காட்டுவது சுதந்திரமா?
பெண் என்றால் அடங்கி போவது சுதந்திரமா??
சொந்தம் இழந்து தனிமையாய் வாழுவது சுதந்திரமா?
சொந்த நாட்டில் அகதியாய் இருப்பது சுதந்திரமா?
சொத்துக்கள் இருந்தும் வெறுமையாய் உணர்வது சுதந்திரமா?
பிஞ்சு குழந்தையை கருவிலே சிதைப்பது சுதந்திரமா?
பஞ்சணையில் இருந்து
கற்பனைகள் புரிவது சுதந்திரமா?
வஞ்சனைகள் புரிந்து வென்றிடுதல் சுதந்திரமா?
சுதந்திரம் பெற்றும் சுதந்திரம் இன்றி வாழ்வது சுதந்திரமா?
சுதந்திரம் என்ற பெயரில் சுயநலமாய் வாழ்வது சுதந்திரமா??
இயற்கையை அழித்து இன்புற்ரிருத்தல் சுதந்திரமா?
செயற்கையாய் சுவாசித்து வாழ்ந்திட்டால் அது சுதந்திராமா??
உடல் பசி போக்க உணவிலாமல் தவிப்பது சுதந்திரமா?? உழைப்பு என்று உறக்கம் மறப்பது சுதந்திரமா?
எது சுதந்திரம்??? ஏதும் இல்லை ???
எங்கு சுதந்திரம்???
எங்கும் இல்லை???
