குழப்பமாய் எனக்குள்ளே

குழப்பமாய் எனக்குள்ளே Srlvi Nithianandan

குழப்பமாய் எனக்குள்ளே

தந்தையின் பெருமை என்றுமே உயர்வு
தரணியில் வந்ததே அமாவாசை சிறப்பு
தந்தை தாய் மகத்தான பிறப்பு
தரம் குன்றா மகுடமாய் இருப்பு

விடுமுறை நாளாம் அமாவாசை வந்திட
விந்தையாய் இன்றுமே வியப்பாய் இருந்திட
கண்ணுக்குள் இன்னுமே இறப்பின் பதியம்
காலத்தால் அழியாத இருப்பின் வதிவிடம்

தளராத நம்பிக்கையில் வாழ்ந்து காட்டியே
அயராத உழைப்பால் முன்னேற்றம் கண்டு
நூறு ஆண்டுகள் பிறப்பின் பெருமையாய்
அரைவாசியில் காலனவன் முடித்தானே வாழ்வை

அனாதைபோல் எனக்குள்ளே என்றும் நினைவு
அமாவாசை நாளும் மெல்லன நகரந்திட
சிதைந்து வாழ்ந்திடல் கடினமாய் எனக்குள்ளே
சித்திரமாய் அகத்திலே சிதையாத நிஜமே

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

Continue reading

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading