கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
வேள்வி
———-
போரிலே வென்றனர் தாமென எதிரிகள்
போட்டனர் வெடிவீசி வேள்வி கொண்டாட
பொதுநூலகம் எரித்தது பெரிய செயலென
தீ வேள்வி யாகியது
மரணத் தறுவாயில் மக்கள்
துடிக்க
மாற்றானோ. மகிழ்ச்சி வேள்வி
கொண்டாடினான்
இரக்க மில்லா மனிதரினால்
இழந்த விட்ட அனைத்தும்
என்று ஏக்கம் நிறைந்திருக்க
வேள்விக்காய் நாள் குறிக்கப் படுகிறது
இதுதான் வேடிக்கை இன்றைய உலகில்
கோவிலில் அன்று வேள்வி என்ற பெயரில்
உயிர்க் கொலைகள்
வேள்வியில் கிடைத்த புலால்
புசிக்க அவர்கள் கலைகள்
பாவம் எனத்தெரிந்தும்
பாவியர் செயலாம்
பாருலகில் என்றுதான் தீரும்
பாமர்ர் சிந்தனை பகுத்தறிவு
மந்தமாய் தெளியவே!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
26.5.24

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading