10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
“ பெற்றோரே”
நடமாடும் தெய்வங்கள் நானிலத்தில் பெற்றோரே!
உடனிருந்து உரிமைதந்து ஊசலாடும் தெய்வங்களே!
கடமையென எண்ணாது கருணையுடன் அணைப்பவரே!
மடமைதனை அகற்றி மகிமைதனைப் புகட்டுபவரே!
எங்களின் பெற்றோரே ஏணியாக நிற்பவர்
தங்களது சுமையை தூசாக நினைப்பவர்
பங்கம் நேராது பவுத்திரம் காப்பவர்
சங்கத் தமிழின் சரித்திரம் சொல்பவர்
வாழ்வில் வசந்தம் வீசிடச் செய்பவர்
ஏழ்மையை விரட்டி ஏந்திக் காப்பவர்
கண்ணில் தெரியும் கடவுளர் பெற்றோரே!
கண்குளிரக் காலமெல்லாம் காக்கவேண்டும் பெற்றோரை…
கோசலா ஞானம்.

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...