அவள் ஏன் அழுதாள்க.குமரன்சந்தம் சிந்தும் வாரம் 179 அவள் ஏன் அழுதாள் புகையிரதப் பயணத்திலே ஒரு நாள் இரு சிறு பிள்ளைகள் துனைவியுடன் இருக்கையிலே எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பத்து வயது சிறுமி அடிக்கடி பார்வையை நம் மேல் பதித்தாள் பத்து நிமிடத்தில் அவள் கண்களில் கண்ணீர் இவள் அழுகைக்கு நாம் காரணமானோமா? பிரிந்த பெற்றோரை நினைத்தாளா ? இன்னகள் நிறைந்த அவள் வாழ்வின் சோதனைகளை நினைத்தாளா? கல்வியில் பிரச்சனையா? கடந்த வாழ்க்கையில் ஏதோ குழப்பமா? மௌனப்பார்வையின் நகரவுகளான விடை தெரியாத வினாகளில் இதுவும் ஒன்றாக இன்று வரை! க.குமரன் யேர்மனி