23
Apr
நேவிஸ் பிலிப் கவி இல(428)
அறிவைத் தேடிய பயணத்திலே
அறிவூற்றுக் கருவாகி
மனக் கிடங்கில் புதைந்து கிடக்கும்
புதையல்களைத்...
23
Apr
அறிவின் விருட்சம்
ஜெயம் தங்கராஜா
அறிவுக்கு இதுவொரு விருந்து
அறியாமையை நீக்கிடும் அருமருந்து
புத்தியை எட்டவைக்கும் பெட்டகம்
வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷம்
வாசித்தால்...
23
Apr
அறிவின் வி௫ட்சம்
வஜிதா முஹம்மட்
மனிதனைமுழுமைப் படுத்தி
மனிதாபத்தை விதைக்கும்
சாக்கடை எண்ணத்தை விலத்தி
சமூக நுட்பத்தை புதைக்கும்
ஆளுமை...
சக்தி சக்திதாசன் (2)
பணம்
பணம் கொண்டோரெல்லாம்
மனம் கொண்டிருப்பதில்லை
மனமுடையோர் எல்லோரும்
பணம் கொண்டிருப்பதில்லை
ஐனநாயகம் பேசுகின்றோர்
பணாநாயகம் தேடுவதும்
ஐயபேரிகை முழக்கம்
ஐகத்திலே பணவசமே !
உழைப்பவர் உலகத்தில்
உறவாடாத பணவசதி
உறிஞ்சுகின்ற கூட்டத்திடம்
உல்லாசப் பணப்புழக்கம்
பணமில்லாக் காரணத்தால்
மணமில்லா மங்கையர்கள்
பணமிருந்தும் பலரிங்கு
மனந்திறக்கா வாழ்க்கையிலே
பணமென்னும் காகிதம்
பாரினது ஜாதகம்
பணமென்னும் சொல்லிங்கு
பல்லரசாய் ஆட்டுதடா
செல்வந்தர் கைகளிலே
செல்லமாக விளையாடும்
வறியோரின் வாழ்க்கையையே
வாட்டத்தில் ஓட்டிவிடும்
நல்லோர்கள் கைகளிலே
நடமாடும் பணமெல்லாம்
இல்லாதோர் வாழ்க்கையினை
இன்பமாய் ஆக்குமன்றோ !
சக்தி சக்திதாசன்

Author: Nada Mohan
23
Apr
ஜெயம்
தொடக்கமும் தெரியாது முடிவும் தெரியாது
அடங்காது பொங்கும் ஓய்வும் அறியாது
அலையின்அலைவும் பார்த்திடஅழகு...
23
Apr
: : செல்வி. நித்தியானந்தன்
அலை
கோடை வந்தாலே
கடலலை ஆர்ப்பரிக்கும்
கோபம் வந்தாலே
அகமும்...
22
Apr
புது வருடம்-70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-04-2025
புது வருடம் மலர்ந்ததிங்கே
புதுமையும் நிறைந்து கொண்டதிங்கே
குதுகலமாய்...