சக்தி சக்திதாசன்சக்தி சக்திதாசன்மூடிவிட்ட புத்தகத்துள் முடங்கிவிட்ட அத்தியாயமாய் ; அடங்கிவிட்ட வாழ்வின் ஆரவாரங்கள் அமைதியாகின ; இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மீளாத உறக்கமிது ; எறும்புகளின் ஊர்வலம்போல் ஊர்ந்து செல்லும் மக்கள் அணிகள் ; இரவுபகல் மாற்றமின்றி முடியாண்ட ராணியை தரிசிக்கும் ஆவலில் ; இருபத்தோடு ஓராறு இளமையின் உச்சத்தில் முடிசூடிக் கொண்டவர் ; தொண்ணூரோடு ஓராறு அகவையில் விழிகளை ஆழமாய் மூடிக்கொண்டார் ; அரியணையில் அமர்ந்து அரசாண்டவர் அல்ல அரசி எலிசபெத் ! மக்கள் மனங்களில் குடியிருந்து நாட்டின் முதுகெலும்பாயிருந்தார் ; ராணியாக மட்டுமல்ல தாயாகப் பாசத்துடன் தாரமாகக் காதலுடன் ; ஒன்றல்ல , இரண்டல்ல ஒன்றான மணவாழ்வில் ஒரெழுபத்தி மூன்றாண்டுகள் ; கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கணப்பொழுதும் தவறாமல் கண்மூடிய தலைவியிவர் ; விமர்சனங்கள், முறைப்பாடுகள் விலகியே வாழ்ந்திருந்து விழிகளை மூடினார் ; கணவனே தன்றன் உரமிக்க அடித்தளமென்றே உரக்கவே உரைத்திட்டார் ; கண்ணிறைந்த கணவன் காற்றாகி ஒரு வருடத்தில் காற்றேகிக் கலந்திட்டார் ; சோதனகள் அடுக்கடுக்காய் சோதித்த போதிலுமே சோராமல் திகழ்ந்திட்டார் ; இறையுணர்வு கொண்டவர் இதயத்தில் அனைத்து மதங்களையும் இயல்பாக மதித்திட்டார் ; பொதுநலவாய நாடுகளை இணைத்திடும் பாலமாய் இருந்தவர் மறைந்திட்டார் ; உயர்ந்த மனிதரிவர் பெருமையினை உணர்த்துமிங்கு அனைத்துலக அஞ்சலியே ! சர்வதேசத் தலைவர்கள் சேர்ந்திங்கு செலுத்துகிறார் சரித்திரப் புகழாஞ்சலி ; நாலுபத்தோடொரேழு அகவைகள் நானுமிங்கு வாழ்வமைத்தேன் நலமுடனே வாழுகின்றேன் ; அன்னை எலிசபெத் மகாராணிக்கு அன்பார்ந்த அஞ்சலிகள் அஞ்சலித்து வணங்குகிறேன் ; போய்வாருங்கள் மகாராணியாரே ! நாட்டினை ஆண்டவராக அல்ல மக்கள் மனங்களை ஆண்டவராக ;