புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சக்தி சக்திதாசன்

தீபஒளியொன்று நெஞ்சில்
தீந்தமிழாய் ஒளிருது
தீயதெம் எண்ணங்களை
தீயுக்கு இரையாக்குது

ஊரெல்லாம் வெடிச்சத்தம்
உள்ளங்கள் குதூகலிக்கும்
உலகத்தின் ஓரோரத்தில்
உரசுகின்ற அழிவுகள்

நானென்றும் எனதென்றும்
நாம்கொள்ளும் எண்ணங்களை
நெஞ்சிலேயே எரித்திடட்டும்
நிறையுமிந்த தீபஒளி

அசுரனை அழிக்கவில்லை
ஆண்டவன் இத்திருநாளில்
அரக்க எண்ணங்களையே
அழித்திட ஆணையிட்டார்

புதுத்துணி அணிவதெல்லாம்
பொழிவினைக் காட்டஇல்லை
பழையவையாம் தீயவைகள்
பறந்தததைக் காட்டிடவே

திருநாட்கள் அத்தனையும்
தேவைதான் வாழ்க்கையிலே
தருமவையின் அர்த்தங்களைத்
தவறின்றிப் புரிந்திட்டால்

அன்பினிய உறவுகளே
அனைவருக்கும் வாழ்த்துகள்
அகிலமெங்கும் ஒளிரட்டும்
அன்பெனும் தீபஒளியே !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading