“அறிவின் விருட்சம்”
அறிவின் விருட்சம்
சக்தி சிறீனிசங்கர்
இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு: பெண்மையைப் போற்றுவோம்
*****************
(சிற்றிலக்கியம்)
1. தாரணி தன்னிலே தாயென வந்தவள்
வீரம் நிறைந்தவள் வீச்சு!
2.வீச்சுடன் வேங்கையாய் வீறு நடையுடையாள்
பேச்சிலும் மூச்சிலும் பெண்!
3.பெண்கள் உலகிலே கண்களும் ஆவாரே
மண்ணிலே மாந்தரில் மாண்பு!
4.மாண்புடைத் தெய்வம் மனத்தில் இருத்துவாய்
ஆண்களே!ஆரணங்கு மேல்!
5.மேன்மையும் கொண்டவள் மேதினியில் பூவிலும்
மென்மை அவளே அறி!
6.அறிவில் சிகரமாய் ஆளுமை கொண்டே
குறியது நோக்கிடும் குன்று!
7.குன்றிலே ஏற்றிக் குடும்பமாய்ப் போற்றவே
என்றும் மகிழ்வாளே ஏத்து!
8.ஏத்தியே வாழ்வாயே ஏந்திழையாள் உன்றனின்
ஆத்தாள்அறிந்தே உணர்!
9.உணர்வில் உருக்கம் உடையாளை எல்லாக்
கணமும் நினைப்பாய் கனிந்து !
10.கனிவுடன் வாழ்ந்து கடமைகள் செய்வாள்
நனிவுடன் போற்றுதல் நன்று!
நன்றி வணக்கம்!
