புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

அழகு
^^^^^^^^^

அழகே அழகு அமைதியான வாழ்வு
இகழ்வே இல்லாத இன்பத்தின் சிறப்பு

புகழ்வேன் நன்றாய் புதுமையும் பொங்கிட
மகிழ்வே கொண்டு மானிலம் செழிக்கவும்

அழகுக்கு அழகு சேர்ப்பதழகே
ஆனந்த வாழ்விலே இன்பம் கொள்வதும் அழகே

விரையம் இல்லாது விழுமியம்சேர்ப்பதழகு
விரைந்தே திறமைகளைக் காட்டுவதும் அழகு

பெரியவர் சிறியவர் என்றில்லாமல் பெருமை மிளிர நடப்பதழகு

பேராண்மை சிந்திடக் கள்ளான்மை
அகன்றிடக் காப்பதும் அழகு

வள்ளலாயிருந்து வாரியிறைப்பதும் அழகு

வரம்பு மீறாத இலட்சியக்கொள்கைகள் இருப்பதும் அழகு

அழகு அழகு என்றே அகத்தினில் தூய்மையும் இருப்பதுதான் அழகு

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading