மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன்
சுவிசில் இருந்து.

*குழலோசை*

கானகத்தின் மரத்தடியே கண்ணனவன் அமர்ந்திருந்து
கால்களை மாற்றிவைத்து களிப்பாகி குழலெடுப்பான்
தேனமுத இசையாலே தேசமெங்கும் மயக்கிடுவான்
தேவருலகும் எட்டிடவே தேன் மாரி பொழிந்திடுவான்
மானதுவும் மருண்டாங்கே மகிழ்வாகி மயங்கிவர
மயிலாங்கே மழைமுகிலான்
வண்ணத்தில் திளைத்தாட
ஆநிரையும் அணைந்துவந்தே அருளூற்றில் மடிசுரக்க
வானணையும் அரம்பையரும் வயமாகி
வரம்தேட
தேனேந்தும் பூமலரும் திருவனத்தே மணம்பரப்ப
தேவியராம் கோதையரும் திருவடியை நாடிவர
வேணுகோபன் விரலாடும் வேய்ங்குழலின் இசைநாதம்
விரைவியதே மதுராவில்…

Nada Mohan
Author: Nada Mohan