சிவரஞ்சினி கலைச்செல்வன்

கை சோர மெய் சோர கவலை ஊற
காலம் எல்லாம் உடலமோ
உழைப்பால் தேய
கை நிறைய காசு பணம்
காணாதோனாய்
கடனாளி ஆகவே வாழ்நாள் ஈறாய்.
உண்மையாய் உழைத்தாலும் உய்வு இல்லை
உலம் இது மாற வேறு வழியா இல்லை.
என் நாளும் ஆண்டாண்டு மே தினமோ
எழிலோடு வருகிறது மீண்டும் மீண்டும்
இன்றுவரை தொழிலாளி
உயரவில்லை
ஏன் இந்த விழாவோ புரிய வில்லை

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading