புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
சிவரஞ்சினி கலைச்செல்வன்
தாயகத்தை பார்க்க தவிப்போடு போனால்
ஏன் வந்தோம் என்ற ஏக்கந்தான் மிஞ்சும்
பாசமுடன் பழகிய பந்த சொந்தம் எல்லாம்
பணத்தை எதிர் பார்க்கும்
ஆயிரம் தேவை அவர்களுக்கு
அதனால் எம்மை காண
பண மரம் காய்த்திருக்கும் நாட்டில்நாம்
புலம் பெயர்ந்து உள்ளதுவாய்
ஊரில் உள்ளோர் நினைப்பு
ஏதேனும் காணி வீடு எமக்கென்று
இருந்தால்
எழுதி தா என்று வற்புறுத்தல்
ஒருவருக்கு உதவினால்
உள்ள பிற சொந்தங்கள் கோபம்
தானாக பாயும் நதி குளம்
இல்லை எனினும்
தேன் பாடும் திருநகர்
மட்டுநகர்
பாடு பட்டு உழைத்து பயன் பெற்று
போதும் என்ற மனதோடு
கூடி வாழ்ந்தோம் ஒருகாலம்
நெல்வயலும் தோட்டமும்
நல்லபடி கயு மரங்களும்
பச்சை படுத்தி வளவு துரவால்
பயன்தந்தது ஒருகாலம்
நாகரீகம் முற்றி அடங்காத ஆசை
நெறி கெட்ட சமூகம்
கொள்ளை கொலை களவு
காமம் என்றெல்லால்
அல்லல் அதிகம்
பிஞ்சுகளை கசக்கும்
பெரிய வயதாளர்
கற்பிக்கும் ஆசிரியர்
கற்பழிப்பு அதிகம்
எமக்கென்ற நாடாய்
எம் தலைவன் கீழாய்
தலைக்குமேல் யமன்
தன்பாட்டில் நடமாட
ஒழுக்கமாய் இருந்தோம்
பச்சைத் தமிழன் இன்று
பாழ்பட்டு
இச்சை தமிழனாய் ஏன் ஆனான்.வேதனைதான்.
மாறுமா நிலை?
