சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 115

பாட்டி

எனது ஆசை அம்மம்மா
பிறப்பிடமோ திரியாய் திருமலை
வந்தோரை நற்பண்புடன் வரவேற்பார்

அம்மப்பா இறந்துபோக
நான்கு பெண்பிள்ளைகளையும்
இரண்டு ஆண் பிள்ளைகளையும் தனிமரமாக நின்று தொப்பாக மாற்றியதாக அம்மா அடிக்கடி சொல்லிடுவா!

அம்மம்மாவுடன் அதிகம் கூடி குழாவ நாம் கொடுத்து வைக்கவில்லை என்பதுவே
ஏக்கம் தான்!!

பாடசாலை விடுமுறை காலத்தில் அம்மம்மாவிடம்
செல்வோம்
கூடியிருந்து குழாவி கதைகள் சொல்லிடுவா விடிய விடிய கதைத்து மகிழ்வோம்

சிற்றூண்டி வகைகள் விதம் விதமாய் செய்து தருவா
நற்சுவையுடன்
நறுக்கிட சாப்பிடுவோம்
விடுமுறை முடிய வீடுதிரும்ப மனமின்றி வந்திடுவோம்!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில் பொங்கலுக்கு அம்மம்மா எங்களிடம் வந்து ஒருமாதம் எங்களுடன் இருப்பா
அம்மம்மாவின்
கதைகேட்டு வயிறு குலுங்க சிரித்து மகிழ்வோம்!!

காப்பு மாலை அம்மம்மா குழல் வாங்கி தருவார்!

தந்தை வழி அப்பம்மா
நான் ஆறுமாத குழந்தையாக இருக்கும் போது இறந்ததாக அப்பா சொல்வார்
ஆணுக்கு ஆண்ணாக பெண்ணுக்கு பெண்ணாக இருப்பார் என அம்மா சொல்வார்!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading