புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_130
“காதல்”
அப்பாவின் அன்பு
அளவிட முடியாது
சொல்லே சோதியாய் சேந்திருக்கு
என்னுள்
அன்பான பேச்சு
அத்திவாரம் போட்டிடும்
நேர்மையும் நேத்தியும்
என்றும் குறையாது
அம்மாவின் அன்பு
காற்றிலும்
மூச்சிலும் கலந்தது
பொறுமயால் வலைவிரிச்சு
போத்திடுவாள் போர்வையாள்
வார்த்தையால் சுடமாட்டார்
ஆடும்மாட்டை ஆடியே கறந்திடுவாள் வார்த்தையால் காதல் வலைவீசி
காத்திடமாய்
நடந்திடுவாள் அம்மாவின் காதல் என்றும் தணியாது
குழந்தைகளின் அன்பு
அளவிடமுடியாது
ஆற்றல் மிக்கது
செந்தமிழ் என்தமிழை
பேசியே மகிழ்ந்து
உவந்தழிக்கும்
உன்னத காதல்
தேனாய் இனிக்குதே
துணையின் அன்பு
பாசம் மிக்கது
பக்குவப்பட்டது
இருமனம் இணைந்து
இணையராய்
இளைப்பாறி
இல்லறத்தில்
நல்லறமாய்
நற்பண்புடன்நாமிணைந்த
காதல் அழகானது அறிவானது
உடன் பிறப்புக்கள்
அன்பு
உற்றெடுக்கும்
அருவியாய்
உர்ந்து பாயுது
உச்சம் கொண்ட அன்பு நெஞ்சமதில்….
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
