அறிவின் விருட்சம்
“அறிவின் விருட்சம்”
சிவா சிவதர்சன்
[ வாரம் 221 ]
“காணி”
காணி என்றலே கண்ணில்படுவது ஆதிக்கவெறிதான்
காணியொன்று அப்பாவாங்கியஞாபகம் தொடர்ந்து இழுபறிதான்
காணியின்விலை வீடுகட்டியசெலவு, வழக்குப்பேசி தொலைத்ததொகை
காணிவழக்கில் எதிரிவென்று செலவு பணமும் கட்டிய கையறு நிலை!
மொத்தச்செலவையும் சேர்த்துப்பார்! தெருவோரம் நல்ல
தண்ணீர் காணி வாங்கிவாழ்ந்திருப்போம்!
இது அம்மாவின் ஆற்றாமை இரங்கலுரை!
“உலகில் நிலமோ மூன்றிலொருபங்கு மீதி இரண்டு பங்கும் நீர்”
இது சிறுவயதில் புவியியல் ஆசிரியரின் பூகோள விளக்கவுரை!
துருவப்பனி மலையுருகி நீராகிக்கடல் நீர்மட்டம் உயர்கிறது
துருவும் கடலலைகள் மண்ணை அரித்து நிலத்தை விழுங்குகிறது
மொத்தமாய் ஒருநாள் நிலம் கடலடியில் மூழ்கப்போகிறது
இது புவியியல் ஆய்வுமையம் விடுத்த எச்சரிக்கையுரை
கண்ணெதிரேகடற்கோள்கள் சுனாமிகள்ஆயிரம் கரையோரகிராமங்களை காணாமல்ஆக்கின
அரசஇராணுவ ஆக்கிரமிப்புக்கள் பலஊர்களையே காவுகொண்டன
தோம்போடுஉறுதியும் உலாந்தாவின் வரைபடமும் கச்சேரிப்பதிவும் இறந்தபிள்ளைக்கு உயிர்கொடுக்குமா?
காணிகளின்றி உயிர்வாழமுடியாதநிலை உண்மையே?
காணி அபகரிப்பில் பொறுமையிழந்து செயற்படுதல் வீண் சக்தி விரயமே!
ஆனாலும் அயலோடு அன்பாய்பழகி இருப்பதைக்கொண்டு சிறப்பாய் வாழ முயல்வோம்
ஏனெனில் ஒருநாள்
காணிகள் யாவும் கடலடியில் மூழ்கலாம் எங்கள் கல்லறைகளிடையே கயல் மீன்கள் நீந்திவிளையாடலாம்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
