புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவா சிவதர்சன்

“அலை ஓசை”

ஓடும்ஆற்றின் சலசலப்பில் அமைதிகலந்த அலையோசை
மாரிகாலப்பூரணையில் விண்ணைமுட்டும் கடலின் அலையோசை
நீரில் மட்டுமா அலையோசை? சக்தியின் பயணமெங்கும் பரவி நிற்கும் அலையோசை
மானிடவாழ்வில் புதைந்த இன்பதுன்பத்தை மீட்டிடும் அலையோசை

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இன்று தூள்பறக்கும் அலையோசை
இந்தியாவின் போட்டிகள் இன்று உலகையே அதிரவைக்கும் அலையோசை
பங்கேற்றும் நாடுகள் வெற்றிக்கிண்ண பேராசை
நேரிலும் நேரலையிலும் காண முண்டியடிக்கும் மக்களின் அலையோசை

அலையோசை தாலாட்டும் வல்லிபுரம் கடலோரம்
பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் தீத்ததோற்சவம்
ஆவணி அமாவாசையில் கடல் நீராடும் ஆழ்வார் கடல்மறையும் வண்ணம் அடியார் தம் பரிவாரம்
படைத்த உயிரினங்களை பாதுகாத்தருளும் திருமாலின் அவதாரம்
ஆண்டுக்கொருமுறை காட்டி மகிழும் அவதாரம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading