அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம் பாவையண்ணா!
பசுமை
“””””””
பசுமையெங்கும் பரந்திலங்கப் பாட்டாளி உழைத்திடுவான்
பசும்புற்கள் படர்நிலத்தில் பசுக்களெலாம்
பசிபோக்கும்
விசும்பதனின் வீழ்துளியே வையகத்தை வாழவைக்கும்.
முசுட்டையுடன் முல்லையுமே முற்றத்தை அழகுசெய்யும்

பசுமைதரு சூழலினால் பசுமைபெறும் உயிர்களுமே
பசுமைதரும் உறவுகளின் பலத்தினிலே
இயங்கிடவே
பசுமரத்தின் ஆணியெனப் பலர்வந்து
போவார்கள்
பசுமையெனும் போர்வையது பாரெங்கும்
அழகியலாம்

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading