என் பிறந்தநாள்
வரமானதோ வயோதிபம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-40
11-06-2024
பாமுகமே வாழி
ஐரோப்பாவின் லண்டன் தமிழ் வானோலி
அகிலமெங்கும் அலை ஓசை துலங்கி
எண்ணற்ற ஆர்வலர் விளங்கி
27ம் அகவை இனிதே காண இதயபூர்வ வாழ்த்துகள்.
உலகமெங்கும் கலைஞரை வளர்த்து
ஊக்கம் கொடுப்பதை நோக்காய் கொண்டு
பாக்களும் இயற்றத் திறமை புனைந்து
பாரெல்லாம் போற்றும் பாமுகமே வாழீ.
தனிமையை அகற்றுவது மட்டன்றி
சமையலறை வரை பேசுமுகமாய் நின்று
எட்டுத்திக்கும் உறவுகள் பெருகி
எண்ணற்ற பொது அறிவொளி புகட்டி
பெண்ணடிமை காட்டிய காலம் போய்
பூட்டியவீட்டிலே பெண் வளர்ச்சி பேசி
ஊட்டிய வானொலி பாமுகமே
பாரதியா நீ பரிதவிப்போர்க்கு உதவியா?
பாமுக அதிபரும், பாரியரும்
பாரினில் தமிழை வளர்க்க பாடு பட்டு
வளரும் கலைஞருடன், வளர்ந்திட்ட உறவுகளும் சேர்ந்து இயங்கி பல்லாண்டு வாழியவே.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
