வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கண்கண்ட தெய்வம்

மண்ணிலுள்ள கண்கண்ட தெய்வம் அன்னை
விண்ணின் இறைவனையும் மீறிவிடும் தன்மை
என்னுருவம் பாராதே கருவறை சுமந்தாளென்னை
இன்னோர் உயிருக்காய் உருக்கியேவிடுவாள் தன்னை

தூக்கமில்லா ஆதவன் இவரென கூறுவேன்
தாங்கிவிடும் பூமியாயெண்றெண்ணி மனம் ஆறுவேன்
வேதங்களைக் கற்றுத்தந்த ஆசான் அவரென
பாதங்களை வணங்குவேன் அம்மன் உருவென

பூமியின் மேலே அதிசயம் பெண்மை
சாமியே அவரென்றால் உண்மையிலும் உண்மை
சுமைகளை சுருக்கி சுகமாக்கிவிடும் வித்தை
அமைந்த பெண்ணினம் அகிலத்தில் விந்தை

பிரபஞ்ச சக்தி அன்னைக்குள் அடக்கம்
பிரமிக்கும் சக்தி அவரிடம் பிறக்கும்
இறைவனும் மதிக்கும் படைப்பென இருக்கும்
இறைவியே அன்னை அண்டமே துதிக்கும்

ஜெயம்
09-05-2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading