பொங்கும் உளமே தங்கும் தையேதங்கராஜாகவி 707 பொங்கும் உளமே தங்கும் தையே மலர்ந்த தை மகிழ்வதை தரும் தை கலக்கத்தை கலைத்ததை விடும் தை ஏக்கத்தை தீர்த்ததை நன்மையதை புரியும் தை வருத்தத்தை ஆற்றியதை ஆரோக்கியத்தை கொடுக்கும் தை மயக்கத்தை தயக்கத்தை நடுக்கத்தை அகற்றியதை சிந்தை விரும்பியதை சிந்தியதை சிறப்புத்தை சுகத்தை சேர்த்ததை சொர்க்கத்தை காட்டுந்தை புதிய தை புதியதை அறிமுகப்படுத்தியதை இரசிக்கும் தை பிரிவதை தடுத்ததை புரிவதை ஊட்டுந்தை முடியாததை முடித்ததை கேட்டதை கொடுக்குந்தை பாதை அமைத்ததை பாதத்தை காக்குந்தை அழுத்தத்தை விலக்கியதை இன்பத்தை இறைக்குந்தை எண்ணத்தை நிறைத்ததை உள்ளத்தை கவர்ந்த தை காலத்தை கொடுத்ததை கோலத்தை பொலிவாக்கியதை நம்பியதை தந்ததை ஆரம்பத்தை ஆரம்பித்த தை வீழ்வதை தாங்கியதை வாழ்வதை வழங்குந்தை கலகத்தை வேரறுத்ததை உலகத்தை விடுவிக்குந்தை நேயத்தை கற்பித்ததை மாயத்தைப் போக்கியதை நேசத்தை பாசத்தை காட்டியதை ஊட்டியதை இத்தை மாற்றத்தை ஏற்றத்தை தரவந்த தை சோகத்தை தொலைத்ததை காயத்தை ஆற்றுந்தை ஆனந்தத்தை நனைத்ததை தினத்தை உருவாக்குந்தை பணத்தை வாரியதை அளித்ததை கடன்தீர்க்கும் தை வரவதை அதிகரித்ததை வாழ்வதை வளமாக்குந்தை ஜெயம் 18-01-2024 https://youtu.be/5a_xHYeSpZ4?si=joganFQYwr0yw-GM