தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -09.01.2024
இலக்கம்-248
வசந்தத்தில் ஓர் நாள்
———————-
வசந்த கால நிலையிலே
வந்ததே அற்புத நினைவுகள்
பாரினிலே நீங்காத நினைவலைகள்
கண்டி மாநகரிலே
பச்சை பசேலென மரம் செடி கொடிகள்
பச்சை கம்பளம் விரித்தாற்போல் வயல் வெளிகள்
வண்ண வண்ண நிறங்களில் மலர்த் தோட்டங்கள்
வண்டுகள் இசை பாடி் திரிந்த காட்சிகள்
கள் உண்ட தேனீக்கள் மயங்கிய தாக்கங்கள்
கண்டி பெரகராவில் யானை அழகுற பார்த்த மகிழ்வுகள்
கண்டி நடன அற்புத காட்சிகள்
மகாவலி ந்தியினிலே முத்துமணி நீரலைகள்
மலையிலே நடந்து சென்ற நினைவலைகள்
வேலைக்கு போக பனியிலே குளித்து நனைந்த நினைவலைகள்
பருவங்கள மாறி பக்குவமான வசந்தகால
நினைவுகள் கனவுகளாய் வந்த நிலையில்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan