தடமது படைத்தெழும் தனித்துவம்

நகுலா சிவநாதன்

தடமது படைத்தெழும் தனித்துவம்

தடமது படைத்தெழும் தனித்துவம்
தடையது உடைத்தெழும் மகத்துவம்
படையெனப் பலவும் நிகழ்வுதனை
பாமுக பரப்பினில் நிகழ்திடும் கணம்

எழுத்தென ஆரம்பம் கண்டு
எழுதிடும் சிறுவர் ஆக்கம் உண்டு
படைத்திடும் பல்வேறு ஆக்கப் பதிவு
பலப்படும் பாமுக திறன் தொிவு
விவாத அரங்கு குடும்பக்குவலயமென
பவனிவர வைத்த காட்சியொளி

இலண்டன் தமிழ் வானொலியாகி
இங்கித தமிழின் விாிவாகி
தனிமனித தொகுப்பாகி
பொியோர் சிறுவர் படைப்பாற்றல் கண்டு
27 அககைவையிலே இனிதாய் புதுமை
மகிழ்வு காணும் பொழுதிலே
புளகாங்கிதம் அடைகிறதே!!
விருட்ச வீாியமாய் விளங்கட்டும்
பாமுக பரப்பாய் மிளிரட்டும் என்றும்

நகுலா சிவநாதன் 1765

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

Continue reading