தீதும் நன்றும்……

ரஜனி அன்ரன்

தீதும் நன்றும்……கவி..ரஜனி அன்ரன் (B.A) 23.05.2024

தீதும் நன்றும் வாழ்வின் இருபக்கங்கள்
தீயது நடந்தால் உள்ளம் தவிப்பு
நல்லது நடந்தால் மனமோ மகிழ்வு
நல்லதிற்கும் தீயதிற்கும் நாமே பொறுப்பு
ஒன்றை விட்டு ஒன்று இல்லையே
தீதும் நன்றும் வாழ்க்கையின் இயலே !

நல்லதை விதைத்து நலமுடன் காத்து
வல்லவராக வாழ்வினை நகர்த்தி
தீமையைக் களைந்தால்
தேரோட்டமாகுமே வாழ்வு
நீரோட்டமாக வாழ்வு அமைய
தீயதைத் தவிர்த்து நல்லதைச் செய்வோம் !

எண்ணங்கள் வாழ்வினைச் செப்பனிட
செயல்கள் சமூகத்தை மேம்படுத்த
விழிப்புணர்வாகுமே வாழ்வு
தீமையை வெல்ல நன்மையே ஆயுதம்
நன்றியோடு வாழ்வினை வாழ
தீயதைத் தவிர்ப்போம்
நல்லதைச் செய்வோம்
தீதும் நன்றும் அவரவர் வினைப்பயனே !

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

Continue reading