அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

நகுலா சிவநாதன்

உறைபனி

உறைகின்ற வெண்பனியே கொட்டுகிறாய்
உணர்வாக உள்ளமதை சீண்டுகிறாய்
விறைப்பாக உடலும்தான் இருக்கிறது
விண்ணதிர மழையாகப் பொழிகிறாய்
கறையாக மண்மீது வெண்பட்டுநீ
கலையாக உன் விழுகை அழகுதான்
நிறைகின்ற நீரையே கட்டியாக்கி
நிறைவாக உறைகிறாய் புவிமேலே

பனியாகப் பொழிகின்ற தண்ணீரே
பகலவனின் அருளாலே திண்மமாய்நீ
உருகுகின்ற உன் எழிலே அழகு
உழவர்க்கு செழிப்பாகும் உன்நீரின் வருகை
மண்மீது மழைத்துளியாய் பூம்பனியே
மாறுகின்ற காலத்தில் மகிழ்வாய்நீ
தண்ணொளியும் குறையுமிந்த மாதம்
தருக்களும் குறைக்குமே இலைகளைத்தானே!

நகுலா சிவநாதன்1741

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading