கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

நான் வாழ்கிறேனா………..

இரா.விஜயகௌரி

என் மரணமும் வலியும் தொடர்கின்றன…….
மௌனத்தின் பிடிக்குள் கரைகிறேன்
உணர்வுகள் என்னை உராய்கின்றன
உண்மையான நல்ல நடிகன் நான்

தினம் தினம் என்னை அலங்கரிக்கிறேன்
தீச்சுவாலையின் கங்குகள் அனல்கக்குகின்றன
போலியான விவரணங்களுள் வாழ்க்கை
மாயத்திரைகளின் மறைவுகளுள் தினக்கதை

எதை எப்படி எங்கு விபரித்தெழுதிடுவேன்
ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர் விழுதுகள்
சீவனைத்தீண்டிதொட்டெழும் உதிரத்தொடுகை
நியாயத்தின்கோடுகள் எங்கே அழிந்தன

புரியாத மனிதர்கள் புரியப்படாத வரைபடங்கள்
வக்கிரத்துள் வரித்தெடுத்த ஒவ்வோர்இழைகள்
பணமும் சுகமும் சொத்தும் எழுதாது என்வாழ்வை
அட என்ன மனிதர்கள்இவர்கள்
நாளைபற்றிய புரிதல் இல்லா கோமாளிகளாய்……..

Nada Mohan
Author: Nada Mohan