நேவிஸ் பிலிப்

கவி இல (74) 22/09/22
பேசாமல் பேசும் உலக மொழி

ஆதியிலே இருந்த மொழி
மனிதன் முதலில் கையாண்ட மொழி
உள்ளத்தை உசுப்பி உணர்வுக்கு
உருக் கொடுத்த ஒரே மொழி

காலப் போக்கினிலே
ஒளியில்லா விழிகளுக்கும்
பேச்சில்லா வாய்களுக்கும்
ஒலி கேட்கா செவிகளுக்கும்
உயிர் தந்து உணர்ந்திட வைத்த மொழி

நாடு இன மத பேதமின்றி
செவிப் புலனற்ற ஏழு கோடி
மாந்தரும் கற்றுப் பயனடைய
அங்கீகாரம் பெற்ற மொழி

முகபாவனையில் அன்பு பேச
குறிப்புக்கள் விரல் நுனியில் நர்த்தனமாட
சைகை மொழியால் கற்றுயர்வோரை
புரட்டாசி இருப்த்து மூன்றாம் நாளில்
வாழ்த்துவோருடனிணைந்து வாழ்த்துகின்றோம்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading