பள்ளிப் பருவத்திலே

செல்வி நித்தியானந்தன்
பள்ளிப் பருவத்திலே ( 714)

பள்ளிப் பருவத்திலே துள்ளி விளையாடி
புள்ளிச் சட்டையுடன் சென்ற காலம்
அள்ளிச் செல்ல புத்தகச் சுமையும்
கள்ளிச் செடியும் காலிலே வலியும்
மறக்க முடியாத நினைவின் வடுவும்

வெள்ளி வந்தாலே வரிசை நிரையும்
தள்ளி விழுத்தி ஓடும் சத்தம்
துள்ளும் மீன்போல் குழப்பும் நாளும்
எள்ளி நகையாடி காலமும் கடக்கும்
ஏங்கிய வலியும் மறக்கத்தான் முடியுமா

படிப்பிலே போட்டி பொறாமை இல்லை
துடிப்பும் என்றும் ஆர்வமும் அதிகம்
பள்ளிப் படிப்பும் வாழ்வாய் இன்றும்
சொல்லிச் செல்ல அற்புத வரமே
பசுமை நினைவாய் அழியா நினைவில்

Nada Mohan
Author: Nada Mohan