புது வருடம்

ராணி சம்பந்தர்

புது வருடம் பூத்தது சித்திரை 14
மெதுவாக வருடிய ஒளிக்கற்றை
முத்திரை பதித்தது சந்தோஷக்
கூத்தில் குதித்ததே திருநாளென

மருத்து நீரில் தலை முழுகிடவே
பெருத்த பெரும் பாவம் கழுவிட
வருத்தும் சோக நோயில் அழுதிட
மானிடர் தேகமோ தொழுதிடவே

பூமி சூரியன் சுற்றிய களைப்பிலே
சாமி போலக் கூட வரும் பரிவாரக்
கிரகங்கள் குளிர்ச்சி அடைந்திட
மோசம் செய்யும் தோஷம் நீங்கிட

திரண்டு வரும் உற்றார் ஒன்றிட
கூடித் தூபமிடும் பொன்னாளில்
பெறும் கைவியளமும் உள்ளம் மலரத்
தரணி எங்கும் கொண்டாடும் இப்
புது வருடமே இப் புது வருடம் .

Nada Mohan
Author: Nada Mohan