19
Mar
வரமானதோ வயோதிபம்
ராணி சம்பந்தர்
ஈரமானதே இளமை அனுபவம்
உரமானது இனிமைப் பதிவகம்
பாரமான சோதனை வேதனை
மறந்தே...
மரக் கிளையில் வந்தமரும் பறவையென
சிறகடித்துப் பறக்கும் எண்ணப் பறவை
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
வானில் வெட்டி மறைகின்ற
மின்னல் சிதறல்களாய்
வேடிக்கைப் பேச்சுக்கள்
வாடிக்கையாகிட
கோடி இன்பம் கண்டு
வரவின்றி செலவு செய்து
உழைப்பில்லா ஊதியம்
உல்லாச வாழ்க்கை
ஏக்கங்கள் கொண்டதில்லை
தாக்கங்கள் கண்டதில்லை
தினம் தினம் ருசித்த வாழ்க்கை
ஆயிரம் மாற்றங்களால்
தொலைத்தலும் தேடலுமாய்
கழிந்திடும் பொழுதுகள்
வாழ்க்கைப் படகினிலே
காலம் நகர்ந்திட
நினைவுகள் மட்டும்
மனதோடு பேசுது.
நன்றி வணக்கம்.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.