புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

ஆறு மனமே

குலையும் உடலின் கட்டு
முதுமை உன்னைத் தொட்டு
அலையும் மனமும் கெட்டு
அதையிதை நாளும் கேட்டு

விலையின் ஏற்றம் கண்டு
விருந்தை மறக்கும் வயிறு
மனதும் சரியும் சுருண்டு
சூழ்ச்சி கண்டு மிரண்டு

வற்றியும் போகும் தனம்
வசமிழந்து மாறும் குணம்
சுற்றியும் பற்றும் சினம்
சுடுகாடாயே மாறும் மனம்

வாட்டிடக் கழறும் உறவும் தினம்தினம்
வந்து காட்டும் நோயும் தரிசனம்
உலகிலே உலவிடுதே இவ்நூதனம்
உள்ளமெல்லாம் இருப்பதோ நரித்தனம்
யாரிங்கு காட்டுவர் கரிசனம்

ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவனிடமே கேளு

மனோகரி ஜெகதீஸ்வரன்.
பதியப்படவில்லை

உறவும் ஒதுங்கும் விட்டு

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading