உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்

பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து குழந்தையின் முகத்தை பார்ப்பாள் பிரசவித்த வேதனையும் மறப்பாள் உதிரத்தை பாலாக்கி ஊட்டி...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

நம்பிக்கை

அழுத்தமான உள்ளுணர்வே நம்பிக்கை
கழுத்தளவு துயரையும்
கடக்கவைப்பது நம்பிக்கை

அனைவரிடமும் இருக்கின்றது ஏதோவொரு நம்பிக்கை
அதில்சிலதைச் சொல்கின்றேன் சிந்திக்க

தொழுதால் கிட்டுமென்ற
நம்பிக்கையே
தொழவைக்கிறது பக்தனை
அழுதால் கிடைக்குமென்ற
நம்பிக்கையே
அழவைக்கின்றது குழந்தையை

விதைத்தால் எழுமென்ற நம்பிக்கையே
வீச வைக்கிறது உழவனை

பசிக்குணவு தருவானென்ற நம்பிக்கையே
பதறாதிருக்கச் செய்கிறது உலகை
பழுத்தால் வீழுமென்ற நம்பிக்கையே பரபரப்பின்றிக் காத்திருக்கச்செய்கின்றது பயனாளிகளை

உதிக்கின்ற சூரியன் சிதறானென்ற நம்பிக்கையே
விடியலைக் காணவைக்கிறது எம்மை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan