தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மாற்றம்

வஜிதா முஹம்மட்்

வான் பூமி மாற்றவில்லை
அதற்குள்ளே
வாழ்கின்ற மானிடம்
மாற்றம் கண்டானே இதற்குள்ளே

நவீனம் என்கின்ற புதுஏடடி
நாள்தோறும் அழிவுகள் பாரடி
நாட்டுக்கு நாடு பெரிடி
நன்மை தீமை இதனடி

அறியாமை அகற்றவே பல
இறைதூதர் வந்தார் மண்ணிலே
அணியாயம் மதம் கொண்டு
மாற்றம் கொண்டது மனிதம்
மண்ணிலே

வாழ்வது எத்தனை காலம்
மானிடம் மறந்தது கோலம்
மண்ணுக்கு இரையாகும் முன்பே
மனிதம் கொண்டு மாற்றம்
காண்பாயா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

Continue reading