முடிவா விடிவா

ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை இன்னும் சுமந்திட்ட சோகம்
தெரியவில்லை இன்னும் எத்தனை பாகம்

மலருமே தேசம் என்கின்ற கனவு
பலரது வாழ்க்கையின் ஒருவேளை உணவு
சிறுபான்மை என்பதால் வாங்குகின்ற உதை
பொறுமையின் பாக்கங்களால் நீளுதிந்த கதை

குட்ட குட்ட குனிகின்ற சீவியம்
துட்டனோ ஒயவில்லை வலியென கூவியும்
பெரும்பான்மை என்பதால் அடக்கியே ஆள்கின்றார்கள்
திருந்தாத ஜென்மமாய் அரக்கனாய் வாழ்கின்றர்கள்

அதிபராய் இருந்தவர்கள் இதுவரையில் சரியாயில்லை
புதிதாய் வந்தவரையும் உடனடியாக புரியவில்லை
பிரச்சினையை தீர்க்காமல் அதிகாரம் தவிர்க்ககின்றது
அரசியலால் அனாதையாகி இனமொன்று தவிக்கின்றது

Nada Mohan
Author: Nada Mohan