தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

மூதாட்டி ஆச்சி

கெங்கா ஸ்ரான்லி

கொட்டு. மழையில் குடையின்றி
கோணல். பையால் மூடிய மூதாட்டி
தட்டுத் தடுமாறி கும்மிருட்டில்
தடுக்கி விழாது வீட்டை யடைந்தாள்
வீடென்றால் மாளிகை ய என்ன
கொட்டில் வீடு கொட்டும் மழையின் ஒழுக்கு
இருந்த பாத்திரத்தை எடுத்து வைத்தாள்
போதவில்லை பாத்திரம் நாலு சட்டிதானே
பாயும் நனைய பக்கத்தில் எடுத்து வைத்தாள்
கந்தல் புடவை மூன்று
எங்கே வைப்பது நனையாமல்
அயலவர் ஒருவர் வந்தார்
ஆச்சி மழைகொட்டுதே
எங்கள் வீட்டில் வந்து தங்கலாம்
மழை விட்டதும் போகலாம் என்றார்
ஆச்சியும் பாயுடன் கந்தல் சீலையுடன்
அங்கே சென்றாள்
அதுவும் ஒரு சிறிய வீடு
ஐந்து பிள்ளைகள் அம்மா அப்பா
இவளுடன் சேர்த்து எட்டுப்பேர்
ஆனால் அங்கு ஒழுக்கு இல்லை
ஆச்சிக்கு நிம்மதியாய் இருந்தது
அது மாளிகை இல்லை
மனம் முழுக்க அன்பின் ஈரம் இருந்தது
இப்படி நினைத்தபடியே கண்ணயர்ந்தாள்
மூதாட்டியான ஆச்சி

Nada Mohan
Author: Nada Mohan