புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
ரஜனி அன்ரன்
“ தமிழின் மகிமை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 22.02.2024
மூவாயிரம் ஆண்டுகள் முற்பட்ட தொன்மை
மொழிக்கென முச்சங்கம் அமைத்த பெருமை
முத்தமிழையும் வளர்த்துப் போற்றிய தன்மை
எல்லைகள் கடந்தும் வாழ்ந்த மகிமை
எல்லையில்லாப் பெருமையினைக் கொண்ட விந்தை
என்றும் எம் தமிழ்மொழிக்கே உரித்தானதே !
வாழ்வியலுக்கு வண்ண இலக்கியம் தந்து
நெடிய வரலாற்றை வரலாற்றுப் பதிவாக்கி
மொழிகளின் தாயாகி வனப்பு மிக்க மொழியாகி
மொழியின் வளமை பெற்ற மொழி
எம் தமிழ்மொழியே !
செம்மொழியென்ற சிறப்பினைப் பெற்று
செந்தமிழ் பைந்தமிழ் நறுந்தமிழாகி
சிறந்தே பிறந்த சிறப்புமொழி
சீரும் அசையும் தளையும் கொண்டு
ஒப்பற்ற இலக்கணங்களை
ஒப்பியல் ஆய்வுகளை
ஒருங்கே கொண்டமொழி எம் தமிழ்மொழியே !
இலக்கியச் செழுமையோடு பழமையாய்
இளமைப் பொலிவோடு புதுமையாய்
உலகு முழுவதும் பரந்து பெருமையாய்
உன்னதமாய் தனித்தே இயங்குது தனித்துவமாய்
உணர்வினில் கலந்த எம் தமிழ்மொழியே
பழமை புதுமை பெருமையென
தமிழுக்கு மகிமையே !
