புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

04.07.23
கவி இலக்கம்-108
திருநங்கை

கருவிலே ஒரு மாற்றமும் இல்லை
இளம் பருவத்திலே தோற்றம்
மாறத் தொல்லையானது உறுப்பு

ஆண் பெண் ஆவதும்
பெண்ஆணாக உரு மாறுவதும்
இயற்கைக்கு மாறான
ஓமோன் சுரப்பு

எல்லோர் போலவும் அழகான பிறப்பு
சொல்லோரால் எரிச்சலான வெறுப்பு

ஆத்திரமான உருவ அமைப்பு
புரிந்தும் புரியாத உணர்வுகளில்
நாளுக்கு நாள் செத்துப் பிழைப்பு

கண்ணீர் வடியும் ஊமை மனதில்
காறித் துப்பும் மூஞ்சிகளின்
மிருகப் பிறப்பு

கை தொழும் ஆண்டவன் கூட
திரு ஆக ஒரு பாதி
நங்கையாக மறு பாதி

கண்டவன் கை தொடும்
திருநங்கையோ சீண்டியவன்
கை பட்டுப் புழுவாய்த் துடிக்க
என்ன பாவம் செய்தனரோ ?

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading