அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.04.24
ஆக்கம்-143
நேரம்

பேரம் பேசிக் காத்திருக்காது நேரம்
பாரம் மூசிப் போர்த்திருக்கா வாரம்
காரம் பூசிப் பூத்திருக்காது கோரம்
அகோரம் கூசி நீர்த்திடுமே வீரம்

பொன்னை விடப் பெரியது நேரம்
பொன் கொடுப்பினும் போனது
திரும்பிடாது இறந்த உயிர் போல
போயிடுமே விண்ணளவு தூரம்

காற்றுள்ள போதே தூற்றிக் கொடு
சேற்றுள்ள போதே நாற்று நடு
ஆற்றலுள்ள போதே அறிவில்
உரமிட்டு ஊக்கமிடு

சற்றுப் பொறு எனத் தேற்றி
தொற்றும் பாணி தோற்று
பற்று அற்றுப் போயிடுமே

வற்றிய நீர் பறவை தேடாதே
வற்று முன் பற்றி வெற்றிக்-
கனி பெற்றிட ஊற்றாய் வரும்
நேரம் பொன்னானது என்று
போற்றிடுவோமே .

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading