ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

16.05.23
ஆக்கம் -102
பெற்றோரே

அருமயான தலைப்பு
பெருமையான பெற்றோரைத் தொட்டதும்
சட்டெனச் சில்லிட்டது தேகம்

கருவில் சுமந்த தாயும்
உருவில் தோள் சுமந்த தந்தையும்
முத்தான முத்துக்களின் வேகம்

நிலவு முற்றமதில் குலாவி
சில சோற்று உருண்டை
ஊட்டிவிட்டுத் தாம் உண்டு
மகிழும் சொத்தான
சொத்துக்களின் தாகம்

எந்தக் கஷ்டமும் காட்டாது
இருந்ததை அதிஷ்டமுடன்
ஊக்கமிட்ட தியாகிகளின்
பாகம்

பயிரிட்டு உயிரூட்டி
எமை வளர்த்தவரே
நாம் போற்றும் பெற்றோரே
காற்றில் கலந்திட்ட சோகம் .

Nada Mohan
Author: Nada Mohan