ராணி சம்பந்தர்

30.07.24
ஆக்கம் -155
விடுமுறை

விடுமுறை என்றதும்
மாணவர், தொழிலாளர்,
வீட்டிலுள்ளோர்க்கு
வலு ஆனந்தம்

திருமுறை வசனமாய்த்
திரும்பத் திரும்ப மனங்
குளிரப் பலமுறை உச்சரிப்பில் பேரானந்தம்

எங்கே போனாலும்
எதில் தாவினாலும்
அங்கே விபரீத உயிர்
இழப்பு நாளாந்தம்

விமானத்தில் நடுக்கமுடன் குலுக்கல்,
வாகனத்தில் போக்குவரத்து நெரிசல்
விபத்தும்,
காடையரில் வெறித்தன
வேட்டும்
நாட்டு நடப்பில் போதுமே சேதாந்தம்

கோடை கால விடுமுறை
தடை போட்டு வீட்டில்
அடை பட்டு முடங்கி
அடங்கி ஒடுங்கிய

வீட்டு வேலை கூட்டாய்ச்
சேர்ந்து முடித்த அழகு
மனம் நிறைவாய்க்
கழிந்த விடுமுறையே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

    Continue reading

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading