(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026

நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன் அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு...

Continue reading

நட்பென்றாலே

செல்வி நித்தியானந்தன் நட்பென்றாலே (772) அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு படைப்பு அருமை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

விரல்களையும் அறிவியல்...

விரல் நுனியில் அறிவியல்..
அகிலத்திரையை ஆட்படுத்தும்
ஆட்சிப் பொறியே அறிவியலே
உலகை ஒடுக்கும் வித்தகமும்
ஓங்குபுகழின் மகத்துவமும்
ஒருங்கே இணைக்கும் பொறிநிலையே
விரையும் தகவல் வீச்சாக
விண்ணில் வளர்ச்சி வீறாக
எங்கும் வளர்ச்சி உலகாளும்
எதிலும் அறிவியல் ஊற்றாகும்

அகிலப்பரிதியின் அடையாளம்
விரலின் நுனியே வெற்றிச்
சின்னம்
ஒற்றை விநாடி உலகாளும்
ஓங்குபுகழாய் மகுடமிடும்
அற்றைத் திங்களில் அறிவியலில்
ஆழம்நிறைந்த தமிழர் நிலை
அணுவை அளந்த மதிநுட்பம்
கடுகைத் துளைத்த அறிவியலே

இற்றை வளர்ச்சி கணினியுகம்
எதிலும் ஏற்றம் அணிதிரளும்
பயனும் பகிர்வும் பாரெங்கும்
ஆட்படும் யுகமே அத்தாட்சி
தெரிவும் தேவையும் எம்வசமே
விரலின் வித்தகம் தனித்துவமே
நாளைய உலகின் நல்வளர்ச்சி
நடப்புகள் சிலது விதிவிலக்கே
மெய்ப்படும் அறிவியல்
மேன்மை பெறும்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan