06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
வசந்தா ஜெகதீசன்
எழுத்தின் வித்தே
பூத்தெழு தமிழே…
உயிர்ப்பின் உதயம்
ஊற்றின் சுவாசம்
மொழியின் நாற்றே
முகவரித் தமிழே
பாமுக வனப்பாய்
பைந்தமிழ் எழிலாய்
வீரியம் நிறைக்கும்
வீறுகொள் எழிலே
வியப்பின் தமிழே
ஊடக மொழியாய்
உறங்காத் தமிழாய்
அடுத்த தலைமுறை
நோக்கிய இலக்கு
அருந்தமிழ் பூக்கும்
காவியப் படைப்பு
எண்ணதிசை ஒளிரும்
ஏற்றமே பெருகும்
வண்ணத் தமிழில்
வாஞ்சை நிறைக்கும்
உலக மொழியாய்
உயர்வை நிமிர்த்தும்
கன்னல் மொழியே
வித்தாய் வீழ்ந்தாய்
விழுதின் விருட்சமே
இளையவர் திறனும்
அழகிய படைப்புக்கள்
அனுதினத் தொகுப்புக்கள்
பெருகிடும் பெருமை
யார் தரும் நிலமை
பாடுகள் பலதாய்
பட்டிடும் போதிலும்
சுட்டிடும் பொன் போல்
ஒளிர்ந்திடும் நேயர்கள்
வற்றாச் சுரங்கத்தின்
வலம்புரியே!
வள்ளல்ப் பெருந்தகையோர்
வாழிய வாழியவே!.
நன்றி

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...