உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

என் தேடலில் தெறிக்கும் துளிகளின் துவக்கம் என் பாடலில் அடக்கம் இக்கவிதையின் ஆக்கம் தாவிடும் ஆசைகள் ஓடிடும் வழியின் ஓரத்தில் கண்டிடும் சிற்சிறு சிந்தனைத் துளிகள் கற்பிக்கும் பேருடை கருத்தினை தத்துவம் என்றே ஒரு காலம் தந்தை கூறிய அறிவுரைகளை ஒதுக்கி ஓடிய வாலிபக்கோலம் ஓடி முடித்தது தனது எல்லையை எப்பொருள் இன்று யார்வாய் கேட்பினும் அப்பொருள் தனிலே மெய்ப்பொருள் தனை கண்டிட வைத்திட்ட காலத்தின் கோலம் காணவைத்ததோ ஒரு உண்மைத் தாண்டவம் நானென்று நிமிர்ந்த ஆணவக்கோலம் நாணிட வைத்திடும் எனை நான் பார்க்கையில் நானென்று இங்கே எதுவுமில்லை என்பதே நானின்று வாழ்வில் கண்டிட்ட உண்மை துரும்பென்று என்றோ எண்ணியதொன்றே துருப்புச் சீட்டாய் வாழ்வினில் மாறிய விந்தை ஞானம் என்றொரு ஆழியின் கரையில் சிந்தையில் இருப்பதோ ஒருதுளி நீரே ! ஓயாத தேடல் ! ஓடிடும் காலம் ! மீத வாழ்வு ஓங்கார கீதம் உள்ளத்தில் ஒலிப்பது என்றும் ஓயாமல் சொல்வது தேடலின் அவசியம் ஒளிந்திடும் உண்மையை துலக்கிட வேகம்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to